ஒரு வார்த்தை கூட உங்களை பற்றி சொல்லலையே.. வருத்தப்பட்ட ரசிகருக்கு வெங்கடேஷ் பட் சொன்ன பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று ஆரம்பித்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களிலும் பங்கேற்ற வெங்கடேஷ் பட் குறித்து யாருமே பேசாதது குறித்து ரசிகர் ஒருவர் வருத்தப்பட, அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் வெங்கடேஷ் பட் பதில் கூறிய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இரண்டு செஃப்கள் இந்த நிகழ்ச்சியை கலகலப்பான கொண்டு சென்றார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நேற்று ஒளிபரப்பான நிலையில் அதில் வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொண்ட நிலையில் நேற்றைய முதல் எபிசோடில் வெங்கடேஷ் பட் குறித்து யாரும் எதுவும் பேசவில்லை என்பதும் குறைந்தபட்சம் அவரை மிஸ் செய்கிறோம் என்று கூட ஒருவர் கூட சொல்லவில்லை என்பது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் இது குறித்து ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: உங்கள பத்தி mis பண்றோம்னு கூட ஒருத்தர் கூட நேத்து showla பேசல அப்படி என்ன sir மனுஷங்க. ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனா நீங்க build பண்ண show la உங்கள miss பண்றோம்னு ஒருத்தர் கூட பேசல அதான் எனக்கு இதான் உலகம்னு தோணுது. May be உங்கள பத்தி பேச கூடாதுனு tv சேனல் சொல்லி இருக்கலாம். Fans நாங்க தான் ரொம்ப feel பண்றோம்
இதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், ‘உண்மை ஒருநாள் வெல்லும்’ என்ற ரஜினி பட பாடலை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments