close
Choose your channels

அஜித் பிறந்த நாளில் 'பாத்து செய்யுங்க': தயாநிதி அழகிரியிடம் வெங்கட்பிரபு வேண்டுகோள்!

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது உள்ளது என்பதும் இந்த பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு இந்த ஆண்டு 50வது பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் ’வலிமை’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசமாக உள்ளது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்காக இயக்குனர் வெங்கட்பிரபு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தான் இயக்கிய ’மங்காத்தா’ படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு விடுத்த வேண்டுகோளில், ‘வரும் மே ஒன்றாம் தேதி தல அவர்களின் 50 வது பிறந்தநாள். அன்றைய தினம் ’மங்காத்தா’ படத்தை உங்களுடைய பவரை பயன்படுத்தி ஏப்ரல் 30ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தால் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டு இருப்போம், பார்த்து செய்யுங்க’ என்று கூறியுள்ளார்.

வெங்கட் பிரபுவின் வேண்டுகோளை ஏற்று அஜீத்தின் 50வது பிறந்த நாளில் அவருடைய 50வது படமான ’மங்காத்தா’ ரீ ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment