பிஜி தீவில் வெங்கட்பிரபுவின் பிரமாண்டமான 'பார்ட்டி' ஆரம்பம்

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

'சென்னை 60002'8 படத்தின் 2ஆம் பாகத்தை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. உலக சுற்றுலாபயணிகளை அதிகம் கவர்ந்த பிஜி தீவில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இங்கு 52 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்த 52 நாட்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்த படத்தை தயாரிக்கின்றார். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைகக்வுள்ளார்.

More News

மணிரத்னம் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது...

'எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா?: தயாரிப்பாளர் ஆனார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் விஜய், அஜித் உள்பட பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நகைச்சுவை நடிகர்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டையும், கடுமையான விமர்சனத்தையும் மாறி மாறி பெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்...

அசோக் செல்வன் நடித்த 'கூட்டத்தில் ஒருவன்': திரை முன்னோட்டம்

'தெகிடி', 144, 'சில சமயங்களில்' உள்பட ஒருசில படங்களில் நடித்த அசோக் செல்வன் நடித்த அடுத்த படம் 'கூட்டத்தில் ஒருவன்'. அறிமுக இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார்...

என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. விஷால்

ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி வரியை தவிர வேறு எந்த வரியும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறப்பட்டது...