இணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட்பிரபுவின் மகளுமான ஷிவானி, தற்போது ஒரு பிரபல இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு இசை மாணவியாக இணைந்துள்ள அவர் பாடிய பாடல்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐந்து வயதிலேயே ‘தாலி’ என்ற ஆல்பத்தில் பாடியதன் மூலம் தான் ஒரு இசை பாரம்பரியத்தில் பிறந்தவர் என்பதை நிரூபித்த ஷிவானி, இசைமேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக தற்போது இசைப்பள்ளியின் மாணவியாகியுள்ளார். ஷிவானியும் அவரது சக இசை மாணவ மாணவிகளும் இணைந்து பாடிய Lazarus என்ற பாடல் தற்போது வைரலாகி வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த Lazarus பாடலை தங்கள் பாணியில் ஷிவானி உள்ளிட்ட மாணவ மாணவிகள் இசையமைத்து பாடிய இந்த பாடலுக்கு இசை ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஷிவானி குழுவினர்கள் தனியாக ஒருசில பாடல்களை கம்போஸ் செய்து பாடியுள்ளனர் என்பதும் அந்த பாடல்களும் இசை ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானியின் இசைக்குடும்பத்தில் இருந்து இன்னொரு இசைக்கலைஞர் உருவாகியுள்ளதற்கு நமது உளங்கனிந்த பாராட்டுக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com