விஜயகாந்த்-சண்முகப்பாண்டியன் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்: பிரேமலதா தகவல்

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

கேப்டன் விஜயகாந்த் மகனும் நடிகருமாகிய சண்முகப்பாண்டியன் நடித்த இரண்டாவது படமான 'மதுரவீரன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஜயகாந்த், பிரேமலதா, இயக்குனர் பி.ஜி.முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பிரேமலதா, 'இயக்குனர் பி.ஜி.முத்தையா கதை சொன்ன அடுத்த நிமிடமே கேப்டன் இந்த படத்திற்கு ஓகே சொல்லிவுட்டார். நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் நம்பினார். முதன்முதலாக ஒட்டுமொத்த தமிழர்களும் குறிப்பாக இளைஞர்கள் ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு விவ்காரத்தில்தான். நமது கலாச்சாரம் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை உலகிற்கு நிரூபித்த போராட்டம் தான் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த 'மதுரை வீரன்' டைட்டில் என் மகனுக்கு அமைந்தது கடவுள் அருளால்தான். சிறு வயதிலேயே அருமையான பாடல்களை இசையமைத்த சந்தோஷ் தயாநிதி, ஒவ்வொரு வரிகளையும் எழுச்சி அடையும் வகையில் எழுதிய யுகபாரதி உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

இயக்குனர் வெங்கட்பிரபு, சண்முகபாண்டியனை வாழ்த்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கு வெங்கட்பிரபு மற்றும் இளையராஜா குடும்பத்தினர்களை பல ஆண்டுகளாக தெரியும். நிச்சயம் வெங்கட்பிரபு இயக்கத்தில் கேப்டன் மற்றும் சண்முகப்பாண்டியன் இருவரும் நடிப்பார்கள், அந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று பிரேமலதா கூறினார்.

More News

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு .

ஆர்.கே.நகரில் முதல் சுற்றில் டிடிவி தினகரன் முன்னிலை

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உள்ள 4 தபால் ஓட்டுக்களில்

'வேலைக்காரன்' முதல் நாள் வசூல் விபரம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில்

சென்னையை அடுத்து மதுரையிலும் நம்ம அணி போட்டியிடும்: ஞானவேல்ராஜா

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா,

கருணாநிதி உருவத்தில் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் பார்த்தேன்: மயில்சாமி

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி பூரண ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வரும் நிலையில்