'தளபதி 68' படத்தில் இந்த நடிகை நடிப்பது உறுதியா? வெங்கட்பிரபு வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,September 10 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சினேகா இருப்பதை அடுத்து இந்த படத்தில் சினேகா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘தளபதி 68’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கும் நிலையில் பிரியங்கா மோகன் ஒரு நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. இன்னொரு நாயகியாக நடிக்க ஜோதிகா, சிம்ரன், சினேகா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’தளபதி 68’ திரைப்படத்தில் சினேகா தான் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட சில பிரபலங்களும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.