'கோட்' நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்.. எதிர்பாராத அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து ’கோட்’ கோட் படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரிக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு எதிர்பாராத அப்டேட்டை கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நடிகைகள் நடித்து வரும் நிலையில் நேற்று மீனாட்சி சவுத்ரி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் ’கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் தனது படத்தின் நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
இந்த பதிவை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு மீனாட்சி சவுத்ரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, ’கோட்’ படத்தில் அவர் ஸ்ரீநிதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்ற அப்டேட்டையும் கூறினார். அர்ச்சனா, வெங்கட் பிரபு ஆகியோர்களின் இரண்டு பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy bday to our #srinidhi @Meenakshiioffl god bless!! Have a super duper year!! #TheGOAT #TheGreatestOfAllTime #Thalapathy68 #aVPhero https://t.co/SgMVUHH6cp
— venkat prabhu (@vp_offl) March 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments