விஜய் பிறந்த நாளில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட வெங்கட்பிரபு.. 'கோட்' அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு பகலாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ’கோட்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நாளை மாலை 6 மணிக்கு ’கோட்’ படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பாடலை பாடியது விஜய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் பாடிய சிங்கிள் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oru chinna treat ♥️#TheGoatSecondSingle #ChinnaChinnaKangal is releasing tomorrow at 6 PM 🫶🏻
— venkat prabhu (@vp_offl) June 21, 2024
Yes!! Indha paadalai paadiyavar…@actorvijay Sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh
@agsentertainment#GOAT @thisisysr… pic.twitter.com/ECXl5WNlEn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com