'சும்மா தெறிக்கும்.. காத்திருங்க'.. 'தளபதி 68' குறித்து வெங்கட் பிரபு ட்விட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’தளபதி 68’ அறிவிப்பு சும்மா தெறிக்கும்’ என்றும் ’காத்திருங்கள்’ என்றும் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ’தளபதி 68’ படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தளபதி 68 ’படத்தின் நாயகி உள்பட முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
T68 announcement chumma therikkum!! Kaathirungal
— venkat prabhu (@vp_offl) July 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments