நாளை 'தளபதி 68' பட அறிவிப்பா? வெங்கட் பிரபு ட்வீட்டால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘தளபதி 68’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக திரைக்கதை அமைக்கும் பணியை வெங்கட் பிரபு முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் என சற்று முன் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கண்டிப்பாக ‘தளபதி 68’ படத்தின் அறிவிப்பாக இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
So what’s next…. Wait till tomorrow 11am.. #VP__ #__VP pic.twitter.com/AKNxOvXm2b
— venkat prabhu (@vp_offl) July 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com