வித்தியாசமாக ஆரம்பமாகும் வெங்கட்பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இயக்குனராக வெற்றி பெற்று தற்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ள வெங்கட்பிரபு தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை தனது அடுத்த இன்னிங்ஸ் ஆக ஆரம்பிக்க உள்ளார். அதுதான் குறும்படம் தயாரிப்பது.
ஒரு நல்ல குறும்படம் தயாரிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் அது தற்போது கைகூடி வந்துள்ளதாக கூறியுள்ள வெங்கட்பிரபு, இந்த குறும்படம் குறித்த விரிவான தகவல்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒரு வலுவான சமூக பிரச்சனையை அலசும் இந்த குறும்படத்தை ஆர்.டி.குமார் இயக்கவுள்ளார். நடிகர் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த குறும்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். 15 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாராகவுள்ள இந்த குறும்படத்திற்கு ஷ்ரேயன் ஒளிப்பதிவாளரகவும், ப்ரவீண் கே.எல். படத்தொகுப்பாளராகவும், ஜெயஸ்ரீ கலை இயக்குனராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது. இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இந்த புதிய இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடிக்க நமது வாழ்த்துக்கள்
Always wanted to try my hands on this one!! Now it's happening finally!! #mybigshortfilm pic.twitter.com/WBazhHqDya
— venkat prabhu (@vp_offl) June 8, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments