'தளபதி 68' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டில் தான்: படப்பிடிப்பு தளத்தில் வெங்கட்பிரபு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.
குறிப்பாக ’தளபதி 68’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இலங்கை சென்றுள்ள நிலையில் அங்கு அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து வெங்கட்பிரபு உள்பட ’தளபதி 68’ படக்குழுவினர் இலங்கை சென்று விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது
இன்னும் ஓரிரு நாளில் விஜய்யும் இலங்கை செல்வார் என்று அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி அல்லது பிப்ரவரியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.@vp_offl spotted at Sri Lanka 🇱🇰
— KARTHIK DP (@dp_karthik) December 30, 2023
Okay guys, it’s time to shift back the gear to #Thalapathy68 😀💥
New Year Special 🤙🏻
pic.twitter.com/Atz58j0DPh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com