வெங்கட்பிரபுவின் 'சென்னை 600028 II' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

  • IndiaGlitz, [Sunday,July 24 2016]

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சரியான 9 வருடங்கள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
'சென்னை 600028 செகண்ட் இன்னிங்ஸ்' என்ற தலைப்புடன் வெளிவரவுள்ள இந்த படத்தில் ஜெய்,சிவா, பிரேம்ஜி, நிதின்சத்யா, விஜய் வசந்த், விஜயலட்சுமி, வைபவ் ரெட்டி, மகத் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு, ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர். வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' இந்த படத்தை தயாரித்து வருகிறது.