'தளபதி 68' படத்தின் அடுத்த சம்பவம்.. வெங்கட் பிரபு பகிர்ந்த மாஸ் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

தளபதி விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பதையும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதால் அவருடைய வேடங்களை வித்தியாசப்படுத்துவதற்காக 3D VFX டெக்னாலஜியில் அவருடைய உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் அமெரிக்காவில் உள்ள 3D கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றுக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்த புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ’வெல்கம் டு ப்யூச்சர்’ என்ற கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள அந்த புகைப்படத்தில் விஜய் 3D VFX டெக்னாலஜியில் ஸ்கேன் செய்வதற்கு உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் அந்த ஸ்டுடியோவுக்குள் விஜய் நுழையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த மாஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்யை வைத்து வேற லெவல் சம்பவத்தை உருவாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு உள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படம் இப்பவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஜோடியாக ஜோதிகா அல்லது சிம்ரன், இன்னொரு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் பிற தகவல்கள் ‘லியோ’ ரிலீசுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.