'தளபதி 68' படத்தின் அடுத்த சம்பவம்.. வெங்கட் பிரபு பகிர்ந்த மாஸ் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

தளபதி விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பதையும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதால் அவருடைய வேடங்களை வித்தியாசப்படுத்துவதற்காக 3D VFX டெக்னாலஜியில் அவருடைய உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் அமெரிக்காவில் உள்ள 3D கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றுக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்த புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ’வெல்கம் டு ப்யூச்சர்’ என்ற கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள அந்த புகைப்படத்தில் விஜய் 3D VFX டெக்னாலஜியில் ஸ்கேன் செய்வதற்கு உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் அந்த ஸ்டுடியோவுக்குள் விஜய் நுழையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த மாஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்யை வைத்து வேற லெவல் சம்பவத்தை உருவாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு உள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படம் இப்பவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஜோடியாக ஜோதிகா அல்லது சிம்ரன், இன்னொரு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் பிற தகவல்கள் ‘லியோ’ ரிலீசுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அடுத்த ஒரிஜினல் சீரிஸ்.. நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் “பாராசூட்”

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது!!

'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்பட 3 தமிழ் படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

இந்த வாரம் திரையரங்குகளில்  சந்தானம் நடித்த 'கிக்' வெளியாக இருக்கும் நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்'  நாளை ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ளது.

வேற லெவல் சார் உங்க நடிப்பு.. 'மார்க் ஆண்டனி' படத்தின் முதல் விமர்சனம்..!

விஷால் நடித்த  'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில்

பிரபாஸ் அடுத்த படத்தில் 'தங்கலான்' நடிகை.. ஹைதராபாத் செல்லும் வீடியோ வைரல்..!

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்  இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், பிரபாஸ்

'ஒத்த ஓட்டு' படத்தில் கவுண்டமணிக்கு இத்தனை கேரக்டரா? செம்ம ரீஎண்ட்ரி தான்..!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'ஒத்த ஓட்டு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.