இதுமட்டும் உண்மையானால் தமிழக முதல்வரின் 'கோட்' நகர்வாக இருக்கும்: வெங்கட் பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள நிலையில் தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இது மட்டும் உண்மையாக இருந்தால் தமிழக முதல்வர் 'கோட்' நகர்வாக இது இருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் தொழிலதிபர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார். சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் அவர்களை சந்திப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, 'இந்த ஏஐ புகைப்படம் உண்மையாக வேண்டும் என்று விரும்புகிறேன், டெஸ்லா தமிழ்நாட்டுக்கு வந்தால், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் கோட் நகர்வாக இது இருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோரை வெங்கட் பிரபு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
I wish this AI generated image becomes true 💥
— venkat prabhu (@vp_offl) September 4, 2024
If #Tesla comes to Tamil Nadu, it will be a #Goat move by our Cm @mkstalin#CMStalinInUSA @Udhaystalin na @TRBRajaa saar 🔥🙏🏽🤞🏼👌🏽 pic.twitter.com/0OavlU8PsR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments