3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பது பயமாகத்தான் இருந்தது: வெங்கட் பிரபு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக ஒரு திரைப்படம் அதிகபட்சமாக 2:30 மணி இருந்தால் மட்டுமே வெற்றியடையும் என்று கூறப்பட்டு வருகிறது என்றும் மூன்று மணி நேரம் படம் என்பது ரசிகர்களை சலிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ’இந்தியன் 2’ படம் இருந்தது என்பதும் ’இந்தியன் 2’ வெளியான முதல் நாளே நெகட்டிவ் ரிசல்ட் ஏற்பட்டதை அடுத்து அந்த படத்தின் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் இருப்பதை அடுத்து சில ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில் அதற்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
முதலில் மூன்று மணி நேரம் படம் என்றவுடன் எங்களுக்கு சிறிது பயம் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் முழுமையாக கதையை சொல்வதற்கு அவ்வளவு நேரம் எங்களுக்கு தேவைப்பட்டது. சுவராசியமான காட்சிகளை கட் செய்து விட்டு படத்தை வெளியிட முடியாது.
மூன்று மணி நேரமாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் சுவராசியமான இருக்கும் என்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும் என்று நினைத்து தான் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள படமாக வைத்துள்ளோம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout