'நானும் விஜய்யும் 'வேட்டையன்' படத்தை பார்த்தோம்: வெங்கட் பிரபு..

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி அன்று தளபதி விஜய் பார்த்தார் என்றும் அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ‘வேட்டையன்’ படத்தை நானும் விஜய்யும் சேர்ந்து பார்த்தோம்’ என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தை நீங்களும் விஜய்யும் பார்த்தீர்கள் என்று செய்தி வெளியானதே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ’ஆமாம் பார்த்தோம், நன்றாக என்ஜாய் செய்தோம், எல்லோருமே தலைவர் ஃபேன் தானே’ என்று தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் ‘வேட்டையன்’ படம் குறித்து விஜய் என்ன சொன்னார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மட்டுமின்றி ‘வேட்டையன்’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை தமிழ் திரை உலகின் பல பிரபலங்கள் பார்த்தார்கள் என்பதும் படத்தை பார்த்து விட்டு அவர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை.. ஒரே ஒரு தீக்குச்சி போதும்: ஜெயம் ரவியின் அடுத்த பட அறிவிப்பு..!

நடிகர் ஜெயம் ரவி, தற்போது "ஜெனி", "பிரதர்”, 'காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு, வீடியோவுடன் வெளியாகி, இணையத்தில் வைரல்

மகிஷாசுரமர்த்தினி மந்திரம் : அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

பிக்பாஸ் புரமோ: பஞ்சாயத்தை பேசி முடிங்க நாட்டாமை.. கொசுத்தொல்லை தாங்க முடியலை

விஜய் டிவியில் கடந்த ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்? மகனை எப்படி ட்ரீட் செய்வார் தந்தை?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாள் முதலே விறுவிறுப்பு ஆரம்பித்து

கொஞ்சம் லோக்கலா களமிறங்கிய பிரதீப் ரங்கநாதன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'டிராகன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில