'கோட்' படத்தில் அஜித்தும் இருக்கிறார்.. எதிர்பார்ப்பை எகிற செய்த வெங்கட் பிரபு..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித்தும் இருக்கிறார் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதை அடுத்து இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ’கோட்’ செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் ஏற்கனவே மல்டி ஸ்டார் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அஜித் படம் எடுத்துவிட்டு விஜயை சந்திப்பதும், விஜய் படத்தை முடித்துவிட்டு அஜித்தை சந்திப்பதும் என எளிதாக நான் செய்துவிட்டேன் என்று நிறைய பேர் என்னை பாராட்டுவார்கள். அவரது ரசிகர்களும் என்னை திட்டவில்லை.

இந்த நிலையில் ’கோட்’ படத்தில் அஜித்தின் ஒரு தருணம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். அது குரலா அல்லது காட்சியா என்பதை நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் ’கோட்’ படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட தருணம் இருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ’கோட்’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'போட்' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை:  நடிகை சமந்தாவின் திடுக்கிடும் பதிவு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மலையாள திரை

கோல்டன் ஸ்பேரோ.. என் நெஞ்சுல ஏரோ.. தனுஷின் NEEK படத்தின் சிங்கிள் பாடல்..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த

மோகன்லால் ஒரு கோழை.. பிரபல நடிகை ஆவேசம்..!

மோகன்லால் ஒரு கோழை என பிரபல நடிகை ஆவேசமாக கூறியிருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன கேரக்டர்? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில்