சூர்யாவின் 'மாஸ்' தோல்வி குறித்து வெங்கட்பிரபு
- IndiaGlitz, [Saturday,April 28 2018]
சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய படம் 'மாஸ்'. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும், வசூல் அளவில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் 'மாஸ் படம் கொடுத்து மார்க்கெட்டை டேமேஜ் பண்ணதும் அவருதான்’ என்ற கருத்துக்கு பதிலளித்த வெங்கட்பிரபு, 'வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம் ப்ரோ. எந்த ஒருவன் வெற்றியை மட்டுமே சந்திக்கிறான் சொல்லுங்க. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை பேலன்ஸ் பண்ண முடியும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த ரசிகரின் கேள்விக்கு ரசிகர்களும் சிலர் பதிலளித்துள்ளனர். அதில் ஒருவர், 'தம்பி எல்லா பாலும் சிக்ஸ் அடிக்க முடியாது சில பால் மிஸ் டைம் ஆகி கேச் ஆகலாம்' என்றும், 'படம் பரவாயில்லையாக இருந்தது ஆனா அது ஆஸ்யூசுவல் வி.பி அண்ணன் ஸ்டைல் கிடையாது அதான் ரீச் இல்லை' என்று இன்னொருவரும், சிங்கம் மாதிரி வெயிட்டான கேரக்டரில் நடித்த சூர்யா இந்த படத்தின் கேரக்டருக்கு செட் ஆகவில்லை என்றும் வைபவ் அல்லது சிவா நடித்திருந்தால் இந்த படம் வெற்றி அடைந்திருக்கும் என்று ஒருசிலரும் கூறியிருந்தனர்.