close
Choose your channels

மாஸ் நடிகர்கள் படங்களை குறை சொன்ன தமிழ் நடிகர்.. 'ஓரளவு உண்மைதான்' என ஒப்புக் கொண்ட வெங்கட் பிரபு..!

Sunday, April 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்கள் படங்களின் டிரைலரை குறை சொன்ன நிலையில், ‘அது ஓரளவு உண்மைதான்’ என இயக்குனர் வெங்கட் பிரபு ஒப்புக்கொண்ட பதிவு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் நண்பராக நடித்திருந்தவர் நடிகர் கார்த்திக் குமார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்களின் டிரைலர் குறித்து விமர்சனம் செய்த போது ’எல்லா மாஸ் நடிகர்களின் டிரைலர் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறது, அவன் வரப்போறான், அவர் வந்துட்டான், அவன் செய்யப் போகிறான், அவன் அடிக்க போறான், என்று தான் கிட்டத்தட்ட எல்லா மாஸ் நடிகர் படங்களின் டிரைலரில் உள்ளது. மக்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கின்றனர்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

இந்த விமர்சனம் குறித்து தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கமர்சியல் திரைப்படங்கள் எடுக்கும் நம் அனைவரையும் பற்றியதுதான் இந்த கருத்து. மேலும் அவர் சொல்வது ஓரளவு உண்மைதான். வழக்கமான கமர்சியல் டெம்ப்ளேட்டில் இருந்து வித்தியாசமாக நாம் கொடுக்க முயற்சித்தால் கண்டிப்பாக ரசிகர்கள் அதை ஏற்க தயாராக இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக் குமாரின் பதிவுவுக்கும் அதற்கு வெங்கட் பிரபுவின் பதிலுக்கும் மாஸ் நடிகர்கள் மத்தியில் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment