வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நிறுவனம்.. அவரே கூறிய தகவல்..!
- IndiaGlitz, [Sunday,December 22 2024]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும், 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.
எனவே, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் ஆரம்பமாக, இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஏஜிஎஸ் நிறுவனத்திடம் ஒரு படத்தில் நான் கமிட் ஆகி இருந்தேன். அது சிவகார்த்திகேயன் படமாக தான் இருந்தது. ஆனால், அந்த கமிட்மென்ட் 'கோட்' படத்துடன் முடிந்து விட்டதால், சிவகார்த்திகேயன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக இயக்க உள்ளேன் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.