விஜய்யின் 'கோட்' சிங்கிள் எப்போது? ரசிகரின் கேள்விக்கு வெங்கட் பிரபு பதில்..!

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆவது எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நிறைவடையும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் தொடங்கி விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகிய நிலையில் அடுத்த கட்டமாக சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவுடன் ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடலை சீக்கிரம் விடுய்யா? என்று கூறிய நிலையில் ’மிக விரைவில் ரிலீஸ் ஆகும் புரோ’ என்று அவர் பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.