close
Choose your channels

'கோட்' டிரைலர் ரிலீஸ் எப்போது? முதன்முறையாக தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

Friday, August 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'கோட்’ திரைப்படத்தின் டிரைலர் எப்போது என நமக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் மூன்றாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 'கோட்’ படத்தின் டிரைலர் எப்போது என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு தரப்பில் இருந்து எப்போதுமே ஒரு திரைப்படத்தின் டிரைலரை 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வெளியிடுவார்கள். அந்த வகையில் 'கோட்’ திரைப்படத்தின் டிரைலரும் 2 வாரங்களுக்கு முன் அல்லது 10 நாட்களுக்கு முன் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இம்மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் 'கோட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment