அனைத்து பணிகளும் முடிந்தது.. 'கோட்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது தெரிந்தது.
இருப்பினும் சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு நடக்கும் சில பணிகளும் தற்போது முடிவடைந்து விட்டதாக வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த படம் தற்போதைய ரிலீசுக்கு முழுமையாக தயாராகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படம் உருவாகி சென்சார் செய்துவிட்டாலும் பைனல் மிக்ஸிங் சவுண்ட் பணிகள் நடக்கும் என்றும் அந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
பைனல் மிக்ஸிங் பணிகளை சிறப்பாக முடித்துக் கொடுத்த உதயகுமார் மற்றும் அவருடைய டீமுக்கு தனது நன்றி என்றும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். மேலும் மிக்சிங் சவுண்ட் குழுவினர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து நிலையில் ‘கோட்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸ்-க்கு இன்றே தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Greatest of all time!!! Final sound mix done!!! Thanks #udhaykumar and team!! And spl shout out to my ad #VeerRamakrishnan and @Premgiamaren #TheGreatestOfAllTime #theGoat @archanakalpathi @aishkalpathi pic.twitter.com/ulxbn5GwXV
— venkat prabhu (@vp_offl) August 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com