அனைத்து பணிகளும் முடிந்தது.. 'கோட்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது தெரிந்தது.

இருப்பினும் சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு நடக்கும் சில பணிகளும் தற்போது முடிவடைந்து விட்டதாக வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த படம் தற்போதைய ரிலீசுக்கு முழுமையாக தயாராகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் உருவாகி சென்சார் செய்துவிட்டாலும் பைனல் மிக்ஸிங் சவுண்ட் பணிகள் நடக்கும் என்றும் அந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பைனல் மிக்ஸிங் பணிகளை சிறப்பாக முடித்துக் கொடுத்த உதயகுமார் மற்றும் அவருடைய டீமுக்கு தனது நன்றி என்றும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். மேலும் மிக்சிங் சவுண்ட் குழுவினர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து நிலையில் ‘கோட்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸ்-க்கு இன்றே தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

More News

தல அஜித்தை வைத்து பைக் ஓட்ட ஆசை... லைலா...

நடிகையாக கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனம் வென்றவர்.

புதுவையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 புரமோ படப்பிடிப்பா? அப்ப இந்த நடிகர் கமிட் ஆகிவிட்டாரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரமோ புதுவையில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக பிரபல நடிகர் தேதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பாலியல் புகார்.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு.. பிரபல நடிகர் கைதா?

நடிகை அளித்த பாலியல் புகார் காரணமாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனையை சந்திக்கும் 'இந்தியன் 2'.. தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2 ' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பதை பார்த்தோம்

திருமலை நம்பியின் அற்புத வாழ்க்கை வரலாறு!

பிரபல ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் வெளியிட்டுள்ள தனது சமீபத்திய வீடியோவில், மஹான்கள் பற்றிய ஆழமான தத்துவங்களைப் பகிர்ந்துள்ளார்.