என்னிக்கு என்கிட்ட கதை இருந்துருக்கு: அஜித் ரசிகருக்கு வெங்கட்பிரபு பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் 'மங்காத்தா 2' எப்போது வரும் என அவ்வப்போது அஜித் ரசிகர்கள் வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித் ஓகே சொன்னால் நான் எப்போதும் 'மங்காத்தா 2' படத்திற்கு தயார்' என வெங்கட்பிரபுவும் பதிலளித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்த நிலையில் இந்த டிரைலர் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என்ற வசனத்தை கோடிட்டு காட்டியிருந்தார். அதற்கு அஜித் ரசிகர் ஒருவர் அதே பக்கத்தில், 'மீண்டும் வெங்கட்பிரபு 'மங்காத்தா 2' படத்தை எடுத்தா கண்டிப்பா அந்த படம் பிளாப் ஆகும்ன்னும் வெங்கட்பிரபுவுக்கே தெரியும். ஏனெனில் அவர்கிட்ட ஒழுங்கான கதை இல்லை' என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த வெங்கட்பிரபு, 'வச்சுகிட்ட வஞ்சனை பண்றேன்', 'என்னிக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு' என்று கூறியுள்ளார். இதற்கு இன்னொரு அஜித் ரசிகர், 'உங்க படத்துல நாங்க எப்போ கதைய எதிர்பார்த்தோம், யுவன் மியூசிக், தல ஸ்டைல் அது போதும் எங்களுக்கு' என்று பதிலளித்துள்ளார்.
Vechikita vanjana pandrey bro!! Enniki enkita kadhai irrundhurukku ;))) https://t.co/S8SRc0zO0b
— venkat prabhu (@vp_offl) June 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments