வெங்கட் பிரபு திடீரென வெளியிட்ட போஸ்டர்.. ரசிகர்கள் மட்டுமல்ல இன்ப அதிர்ச்சியில் 'கோட்' நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் வெங்கட் பிரபு இன்று திடீரென தனது சமூக வலைத்தளத்தில் ’கோட்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த நடிகரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் முழு வீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடக்கும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’கோட்’ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா என்பதும் இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ’கோட்’ படத்தில் அவர் நடித்த கேரக்டரின் போஸ்டரை வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த எதிர்பாராத போஸ்டர் பிரபுதேவாவுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
A very happy bday @PDdancing master!! With love from ur #TheGOATteam #TheGreatestOfAllTime pic.twitter.com/W6xMNfAV8v
— venkat prabhu (@vp_offl) April 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com