சகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
மே 24ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இந்த தினத்தில் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். அந்த வகையில் திரையுலக பிரமுகர்களும் தங்களுடைய சகோதர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது சகோதரர் பிரேம்ஜிக்கு வாழ்த்து சொல்லும் வகையில் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பழைய வீடியோ என்று குறிப்பிட்ட அவர் அந்த வீடியோவில் சகோதரர் தினத்துக்காக அன்புடன் வெங்கட்பிரபு தனது சகோதரரை பார்ப்பது போலவும், அவர் அருகில் நெருங்கி வரும் பிரேம்ஜி, அவர் கையில் இருக்கும் மது பாட்டிலை எடுத்துக் கொண்டு செல்வது போலவும், இதனையடுத்து வெங்கட்பிரபு ஏமாற்றம் அடைவது போன்றும் உள்ளது.
இந்த வீடியோவின் பின்னணியில் ரஜினிகாந்த், பிரபு நடித்த ’தர்மத்தின் தலைவன்’ படத்தில் இடம் பெற்ற சகோதரர்கள் குறித்த பாடலின் இசை ஒலிக்கின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு சாந்தனு உள்பட பலர் தங்களுடைய பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Old post!! #HappyBrothersDay2020 wishing all da brothers out there a happy brothers day!!! @Premgiamaren pic.twitter.com/uQWkQhlyij
— venkat prabhu (@vp_offl) May 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments