'மாநாடு' படப்பிடிப்பு நடந்த இடத்தில் 'கோட்'.. வெங்கட் பிரபு சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

  • IndiaGlitz, [Saturday,May 25 2024]

இயக்குனர் வெங்கட் பிரபு தனது முந்தைய படமான ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்த படம் வெங்கட் பிரபுவின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு இறுதி கட்டமாக பாண்டிச்சேரியில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக பாண்டிச்சேரி அரசு அதிகாரிகளிடம் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடந்த அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே விமான நிலையத்தில் தான் ‘மாநாடு’ படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் ஒருவேளை இந்த படம் வெங்கட் பிரபு சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாண்டிச்சேரியில் மூன்று நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் முழுமையான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் முழு வீச்சில் தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தை 50% டப்பிங் பணியை விஜய் முடித்து விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்த கட்டமாக ஜூலை மாதம் டப்பிங்கில் கலந்து கொள்வார் என்றும் ஜூன் மாதம் முழுவதும் அவர் தனது அரசியல் பணிகளை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.