வெங்கட்பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெங்கட்பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவான அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் குமார் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’மன்மதலீலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ’மன்மதலீலை’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தமிழழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. அசோக்குமார், சம்யுக்தா மேனன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.