இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபல நடிகரா?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ’மாநாடு’ மற்றும் ’மன்மதலீலை’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க உள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் வேலைகளை தொடங்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் ‘டான்’, ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனையடுத்து அவர் தமிழ், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணையும் திரைப்படம் உருவானால் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.