close
Choose your channels

எனது அடுத்த படம் இந்த ஹீரோவுடன் தான்.. ஆனால் இப்போதைக்கு இல்லை..! வெங்கட் பிரபு

Sunday, August 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’கோட்’ திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ள நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் வசூல் இந்திய திரை உலகில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தான் அவர் இயக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் ’எனது அடுத்த படம் சிவகார்த்திகேயன் படம் தான், ஆனால் அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் அந்த படங்களை முடித்துவிட்டு அவர் வரும்வரை நான் காத்திருப்பேன், ஆனால் அதே நேரத்தில் எனது அடுத்த படம் சிவகார்த்திகேயன் படம் தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடித்த பின்னர் சுதா கொங்கரா இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். அதன் பிறகுதான் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment