இசைஞானி இளையராஜாவின் சொக்க வைக்கும் ரொமான்ஸ் பாடல்.. 'கஸ்டடி' சிங்கிள் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ திரைப்படத்தின் பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரொமான்ஸ் பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்த திரைப்படம் ‘கஸ்டடி’. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்த இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’டைம்லெஸ் லவ்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை மதன் கார்த்தி எழுதி உள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மெலடி ரொமான்ஸ் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை இளையராஜாவின் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த சாமி, வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரியாமனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது.
Come fall in love with the #timelesslove!!! A fresh breezy jazzy number from @ilaiyaraaja and @thisisysr #custody2ndsingle
— venkat prabhu (@vp_offl) April 23, 2023
Tel: https://t.co/B5Hlwy6AMP
Tam: https://t.co/ksftlTpTmP
✍️ @ramjowrites @madhankarky
🕺 @Sekharmasteroff#CustodyOnMay12@chay_akkineni…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com