நடிகர் சூர்யாவை எதிர்பாராமல் சந்தித்த வெங்கட் பிரபு.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவை இயக்குனர் வெங்கட் பிரபு எதிர்பாராமல் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது அவர் தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்ற வெங்கட் பிரபு, விஜய்யை 3டி ஸ்கேன் எடுக்கும் பணியை பார்வையிட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திடீரென விமான நிலையத்தில் எதிர்பாராத வகையில் சூர்யாவை சந்தித்ததாகவும் சில வருடங்களுக்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மாஸ் என்ற மாசிலாமணி’ என்ற திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார் என்பதும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
And this happened at the airport!!! Met @Suriya_offl na after ages!! Lovely catching up na❤️🤗 pic.twitter.com/fmMJ4ucRNy
— venkat prabhu (@vp_offl) September 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments