'கோட்' படத்தின் முக்கிய பணி முடிந்தது.. வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்தி வெளியான நிலையில் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக VFX பணிகளுக்காக வெங்கட் பிரபு சமீபத்தில் அமெரிக்கா சென்று இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ’கோட்’ படத்தின் VFX பணிகள் குறித்த புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ’கோட்’ படத்தில் தளபதி விஜய்க்கான படத்தின் VFX பணிகள் முற்றிலும் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ‘கோட்’ படத்தின் VFX பணியின் போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அட்டகாசமாக விஜய் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மேலும் அமெரிக்காவின் தலைசிறந்த லோலா விசுவல் எபெக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் தான் இந்த பணிகள் நடந்ததாகவும் இதன் அவுட்புட்டை காண காத்திருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Successfully completed the VFX work with @actorvijay na at @lolavfx can’t wait for the output!!! #TheGreatestOfAllTime #TheGOAT #aVPhero @archanakalpathi @aishkalpathi @hariharalorven pic.twitter.com/6BL29XOoXK
— venkat prabhu (@vp_offl) May 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments