ஆர்.கே.நகர் ரிலீஸ் தள்ளி வைப்பு! அரசியல் அழுத்தம் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பெனி தயாரித்த 'ஆர்.கே.நகர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தபோது, திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
என்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவணராஜன் இயக்கிய 'ஆர்.கே.நகர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீசாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பாராத ஒருசில காரணங்களினால் தேர்தலுக்கு பின்னர்தான் ரிலீசாக உள்ளது. இந்த படம் ஒரு அரசியல் படம் இல்லை. ஒரு ஜனரஞ்சகமான படம். இருப்பினும் தேர்தலுக்கு பின் ரிலீஸ் செய்யுமாறு எங்களிடம் கூறப்பட்டது. இதுகுறித்து நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. நாங்கள் செய்யாத ஒரு தப்புக்காக இந்த படத்தின் ரிலீசை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அவருடைய பேச்சில் இருந்து இந்த படம் அரசியல் காரணங்களாகவே தள்ளிப்போனதாக தெரிகிறது.
வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள ஆர்.கே.நகர் படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Thank for the love and support!!! ???????? @blacktktcompany @badri_kasturi @saravanarajan5 @actor_vaibhav @Premgiamaren @Cinemainmygenes @subbu6panchu @vasukibhaskar @Nitinsathyaa @Aishwarya12dec #RKNagar pic.twitter.com/y4AR0zYC4p
— venkat prabhu (@vp_offl) April 9, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments