வெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு கிடைத்த சென்சார் சர்டிபிகேட்

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் கிளாமரான ஸ்டில்கள் வெளிவந்தபோது பலர் இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ்தான் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஜெய், ஷ்யாம், சந்திரன், சிவா, சத்யராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ், ஜெயராம், நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார். பிரேம்ஜி அமரன் இசையில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.