ரிபீட்ல பாப்பீங்க - வெங்கட் பிரபுவின் வேற லெவல் டீஸர்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த திரைப்படமான ’மன்மத லீலை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது .

இந்த வீடியோவில் நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி சம்யுக்தா ஹெக்டே கொடுக்கும் அழுத்தமான லிப் கிஸ் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த வீடியோவை இளசுகள் ரிப்பீட் முறையில் பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக் செல்வன், சம்யூக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்துள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.