வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே, மேலும் நேற்று இந்த படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்கட்பிரபுவுக்கு ரஜினி படம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் இணைந்து வழங்கும் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

இதுவே பெரிய சாதனை தான்: ஆஸ்கார் விருது குறித்து விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகிய 'கூழாங்கல்' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 'இதுவே பெரிய சாதனை' என வருத்தத்துடன் பதிவு செய்திருப்பது

'விருமன்' படம் குறித்து மாஸ் அப்டேட் தந்த அதிதிஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் 'விருமன்' படம் குறித்த மாஸ் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.

உன்னால் எனக்கு பிபி ஏறிடுச்சுடா: புலம்பிய போட்டியாளரின் தந்தை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று அக்ஷராவின் தாய் மற்றும் சகோதரர் வந்தனர் என்பதும் அதேபோல் சிபியின் தந்தை மற்றும்

ஓய்வு பெற்றிருப்பேன்… எனது கம்பேக்கிற்கு இவர்தான் காரணம்… மனம்திறந்த அஸ்வின்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராகவும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் வலம்வரும் ரவிச்சந்திரன்

கிரிக்கெட் கிரவுண்டில் பிரபல வீரருக்கு நெஞ்சுவலி… உருகும் ரசிகர்கள்!

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஓப்பனராக இருந்துவரும் 34 வயதான அபித் அலி நேற்று உள்ளூர் கிரிக்கெட்