வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே, மேலும் நேற்று இந்த படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட்பிரபுவுக்கு ரஜினி படம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் இணைந்து வழங்கும் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enna Makkaleee ready haaaaa ? #VP10 A Venkat Prabhu Quickie title look announcement soon ?? @vp_offl @kbsriram16 @Aishwarya12dec @blackticketco https://t.co/Tv9gryuMY4 pic.twitter.com/JCAjdREdbQ
— RockFort Entertainment (@Rockfortent) December 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com