லாக்டவுன் தளர்வுக்கு பின் ஆன்மீக சுற்றுலா சென்ற வெங்கட்பிரபு குழுவினர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் வீட்டைவிட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை என்பது தெரிந்ததே குறிப்பாக சுற்றுலா என்பதையே பொதுமக்கள் இந்த ஐந்து மாதங்களில் மறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களை போலவே திரையுலக பிரமுகர்கள் பலரும் படப்பிடிப்பு இல்லாமலும் வெளியூர், வெளிநாடு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இபாஸ் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து தற்போதுதான் பொதுமக்கள் இயல்பாக வெளியே வரத்தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி உள்பட அவருடைய நண்பர்கள் வட்டாரம் லாக்டவுன் தளர்வுக்கு பின் முதல் பயணமாக திருவண்ணாமலை கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்த பயணத்தில் நடிகர் கருணாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வெங்கட்பிரபு மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் திருவண்ணாமலை பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com