காயம்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும்: வெங்கட்பிரபுவின்  'கஸ்டடி' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகா சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. மே 12ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அரவிந்த்சாமி பக்கா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் உள்ள காட்சிகள் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் ப்ரியாமணி நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார் என்பதும் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டீசரில் உள்ள வசனம்: காயப்பட்ட ஒருத்தனை எந்த எல்லைக்கும் கொண்டு போய்விடும், அது என்னை இப்ப எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பது எனக்கு தெரியும், அது ஒரு போர்க்களம். சாவு என்னை துரத்திகிட்டு இருக்கு என்று எனக்கு நன்றாக தெரியும், ஆனால் அது எப்போது, எப்படி, எங்கிருந்து வரும் என்று எனக்கு தெரியாது, தெரிந்து கொள்ள நான் விரும்பவும் இல்லை. ஏன்னா நான் கையில எடுத்துக்கிற ஆயுதம் ஒரு நிஜம். அந்த நிஜத்தை நீங்க எவ்வளவு ஆழமாக புதைத்தாலும் ஒரு நாள் அது திமிருகிட்டு வெளியே வந்தே தீரும்.