அவரை சந்தித்தது மிகப்பெரிய ஆனந்தம்.. 'கஸ்டடி' படக்குழுவினரின் மகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ மற்றும் ’மன்மதலீலை’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘கஸ்டடி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டி, ஜீவா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘கஸ்டடி’ படத்தின் குழுவினர் சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. ஏற்கனவே இசைஞானி இளையராஜாவை சந்தித்தது குறித்து நடிகர் நாகார்ஜுன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் ’அவரை சந்தித்தபோது எனக்கு மிகப்பெரிய ஆனந்தம் ஏற்பட்டது, அவருடைய இசையில் தான் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்திருக்கிறது, பலமுறை அவரது இசையை மனதில் வைத்து தான் நான் நடித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எனது ‘கஸ்டடி’ படத்திற்கு அவர் இசையமைத்ததால் உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மே 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Such a big smile on my face meeting the Maestro Ilaiyaraaja sir , his compositions took me through so many journeys in life .. so many times have I played out a scene in my head , pictured a script with his reference .. to now rajasir composing for #custody . Truly grateful !! pic.twitter.com/YVwpoGgN9F
— chaitanya akkineni (@chay_akkineni) February 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments