சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபுவா?

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபு என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற வெங்கட்பிரபுவுக்கு ரஜினி படம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை அனுதீப் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் இயக்குனர் அனுதீப்புக்கு உதவி செய்ய வெங்கட் பிரபு ஒப்பு கொண்டிருப்பதாகவும், வெங்கட்பிரபுவின் கைவண்ணத்தால் தெலுங்கு பாணி தவிர்க்கப்பட்டு, இது ஒரு முழுமையான தமிழ் திரைப்படமாக இருக்கும் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வெங்கட்பிரபுவின் சகோதரரும் நடிகருமான பிரேம்ஜி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் பிரவீன் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெங்கட்பிரபு இந்த படத்தில் பணியாற்றுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

More News

பா ரஞ்சித் - கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணியில் இருந்து நீக்க வேண்டுமா? தக்கப்பதிலடி கொடுத்த ரஹானே, புஜாரா!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சடீஸ்வர் புஜாரா,

நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் நுழைந்த கொரோனா வைரஸ்: யார் யாருக்கு பாதிப்பு?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு

நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார். 

நாளை முதல் திரையரங்குகள் மூடப்படுகிறதா?

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு என்றும் தமிழக அரசு சற்று முன் அறிவித்தது என்பதை பார்த்தோம்.