சிம்புவின் மாநாடு படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நிறுத்தம்?

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ‘மாநாடு’ இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இடையே சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வந்தனர்.

இந்த வதந்திக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த இயக்குனர் வெங்கட்பிரபு ’எப்பா சாமி, ஏன் இப்படி? தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள். ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா எங்களை வேலை செய்ய விடுங்கள்’ என புலம்பியவாறு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

வெங்கட்பிரபுவின் இந்த விளக்கத்திற்கு பின்னர் ‘மாநாடு’ படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் சிம்பு ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.