close
Choose your channels

சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகளா? வெங்கட்பிரபு விளக்கம்

Saturday, July 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு ஆக்சன் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ், சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பார் என கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கமளித்த இயக்குனர் வெங்கட்பிரபு, '‘நான் தற்போது ‘பார்ட்டி’ படத்தின் பின்னணி வேலைகளில் பிசியாக இருக்கிறேன். சிம்பு படத்தின் ஸ்கிரிப்ட்டை இன்னும் முடிக்க வில்லை. யார் நாயகி என்பதையும் முடிவு செய்யவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். அதோடு இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலையும் வெளியிடுவேன். அதுவரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ், ஜான்வி ஆகியோர் நடிக்கவுள்ளதாக வந்த செய்தி வதந்தியே என்று இதன்மூலம் தெரியவருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment