close
Choose your channels

 'தளபதி 68' அப்டேட் எப்போது? கிறிஸ்துமஸ் வாழ்த்தில் தெரிவித்த வெங்கட் பிரபு..!

Tuesday, December 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது என்பது குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியபோது தெரிவித்துள்ளார்.

நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அன்பை பரப்புங்கள் என்று கூறினார். மேலும் ’தளபதி 68’ படத்தின் அப்டேட் மிக விரைவில் வரும் என்றும் பண்டிகை காலங்களை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ’தளபதி 68’ படத்தின் அப்டேட் இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என்றும் வரும் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒரு வருடம் 19 வயது கெட்டப்பில் இருக்கும் வேடம் என்றும் இதற்காக புதிய டெக்னாலஜியை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment