பிப்ரவரி 28 முதல் ஏரியா மாறுகிறார் வெங்கட்பிரபு

  • IndiaGlitz, [Monday,February 22 2016]

வெங்கட்பிரபு இயக்கிய முதல்படமான 'சென்னை 600 028 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியவதை அடுத்து அதே படத்தில் நடித்த சிவா, ஜெய், வசந்த், உள்பட அனைவரையும் வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில வாரங்களாக கவனித்து வந்த வெங்கட்பிரபு தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிட்டு அன்றே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை வெங்கட்பிரபுவின் 'பிளாக்டிக்கெட்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அவர் சென்னை 600 029 என்ற டைட்டிலை தேர்வு செய்திருப்பதாகவும், முதல் பாகத்தில் இருந்த 600028 என்ற ஏரியாவை அவர் இரண்டாவது பாகத்திற்கு 600029 என்ற ஏரியாவுக்கு மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

கார்த்தியின் தோழா'வுக்கு கிடைத்த முதல் வெற்றி

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் கார்த்தியின் அடுத்த படமான 'தோழா' படமும் ஹிட்டானால் கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த ஹீரோ பட்டியலில் கார்த்தியும் இணைந்துவிடுவார்...

அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை. பிரபல ஹீரோ

'மிருகம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நா காக்க' போன்ற பல படங்களில் நடித்த கோலிவுட்டின் இளம் நாயகன்...

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை...

4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத...

தர்மதுரை இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா

'நானும் ரெளடிதான், 'சேதுபதி' என இரண்டு தொடர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதி தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமியின்..