எங்கே விட்டோமோ அங்கே இருந்துதான் ஆரம்பிப்போம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட சவால்.. வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் வெங்கட் பிரபு சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ’எங்கே விட்டோமோ அங்கிருந்துதான் ஆரம்பிப்போம்’ என்று கூறி ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியபோது, ’ நண்பன் சேலஞ்ச் என்ற சவாலை நான் ஆரம்பிக்கிறேன், நீங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள், ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற இந்த படம் ஆரம்பிப்பதற்கு காரணமே ஒரு நண்பன் தான். ஐஸ்வர்யா என்ற என்னுடைய நண்பர் தான் இந்த படத்தை தயாரிக்கிறார் என்று தெரிந்தவுடன் நானும் அந்த படத்தில் இணைந்தேன். அதன் பிறகு தான் இந்த படத்தில் பலர் இணைந்தனர். ஆனால் இதற்கான பிள்ளையார் சுழி போட்டது எங்கள் நட்புதான், அப்படித்தான் இந்த படத்தில் நான் உள்ளே வந்தேன்,
ஆனால் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்னுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்து கூறுகிறேன். என்னுடைய நெருங்கிய நண்பன் எஸ்பிபி சரண் தான். நாங்கள் இப்போ ரொம்ப பிஸி ஆயிட்டோம், அவங்க அவங்க வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அவ்வப்போது நாங்கள் மீட் பண்ணுவோம், எப்போதுமே எங்கே விட்டோமோ அங்கே இருந்து தான் நாங்கள் ஆரம்பிப்போம், அதுதான் ஒரு நல்ல நட்புக்கு அழகு என்று நான் நினைக்கிறேன்.
நட்பு என்றாலே நிறைய சண்டைகள், பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும், எங்கள் நட்பிலும் அதேமாதிரி சண்டை வந்துள்ளது. ஆனால் அதைத் தாண்டி என்னை ஹீரோவாக அறிமுகம் செய்ததும், என்னை இயக்குனராக அறிமுகம் செய்ததும் எனது நண்பர் எஸ்பிபி சரண் தான். இப்போது நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் இதற்கு காரணம் எஸ்பிபி சரண் தான்.
அந்த மாதிரி ஒரு நண்பன் வந்த பிறகு உங்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் இந்த சவால். நீங்கள் இந்த சவாலில் கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#novpchallenge my nanban @charanproducer ❤️🤗 and now it’s time to talk about ur nanba/nanbi #nanbanoruvanvanthapiragu #NOVPfromAug2nd @ActorAnanth @Aishwarya12dec @masala_popcorn @SureshChandraa @SakthiFilmFctry @sakthivelan_b pic.twitter.com/Gf0GrTgWCK
— venkat prabhu (@vp_offl) July 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com